×

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கி ‘பயர்’

குழந்தைகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், தற்போது பொம்மை துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு பிறந்த நாளை கொண்டாடும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவின் வார்தாவை சேர்ந்த இளைஞர் ஹிருத்திக் வான்கடே என்பவரின் பிறந்த நாள் விருந்து கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேஜையில் கேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிறந்த நாள் கொண்டாடும் இளைஞரின் மீது அங்கிருந்த ஒருவர் ‘ஸ்ப்ரே’ தெளித்தார். இதற்கிடையில் அங்கிருந்த இருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தீப்பிழம்பு, பிறந்த நாள் கொண்டாடும் இளைஞரின் முகத்தில் திடீரென பற்றியது. பீதியடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் முயற்சித்தனர். ஒருவழியாக தீவிர காயமின்றி அந்த இளைஞரை காப்பாற்றினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கி ‘பயர்’ appeared first on Dinakaran.

Tags : Gun 'Fire ,
× RELATED அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 2 பேர் பலி